அன்னை தெரசா அவர்களின் 111வது பிறந்த நாள் விழா; பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம்.

அரூரில் அன்னை தெரசா அவர்களின் 111வது பிறந்த நாள் விழாவான இன்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

தர்மபுரி மாவட்டம் அரூர் முருகர் கோவில் தெருவில் அன்னை தெரேசா அவர்களின் 111வது பிறந்த நாள் விழாவான இன்று அவரை நினைவு கூறும் வகையில் தர்மபுரி மாவட்ட அன்னை தெரேசா பேரவை சார்பில் மாவட்ட தலைவர் தீப்பொறி செல்வம் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் பல வகையான 111  மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

இதில் அன்னை தெரசா பேரவையின் மாநில துணைத்தலைவர் கையிலை ராமமூர்த்தி கலந்துகொண்டு  அன்னை தெரேசா அவர்கள்  நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பொதுமக்களுக்கு நல்ல திட்டங்களையும் அவருடைய செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தொமுச மாநில துணைத் தலைவர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் எம் இராஜேந்திரன் சமூக சமத்துவ படை மாவட்ட தலைவர் புத்தமணி, பசுமை சீனிவாசன் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form