மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலமாக SSC தேர்விற்க்கான இலவச பயிற்சி.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலமாக SSC போட்டித் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் பெருமளவில் இலவச பயிற்சி வகுப்பிற்க்கு விண்ணப்பித்து பயன் பெறுலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2021-ம் ஆண்டிற்கான மத்திய ஆயுதப்படை காவலர் ஆண், பெண் இருபாலரும் (SSC Constable GD) தேர்விற்கான 25,271 காலிப்பணியிட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2021. போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு 01.09.2021 முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள்நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் http://bit.ly/3ynmGyv என்ற இணையதள படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் தொலைபேசி எண். 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். SSC போட்டித்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் பெருமளவில் இலவச பயிற்சி வகுப்பிற்க்கு விண்ணப்பித்து பயன்பெறுலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form