கிணற்றில் விழுந்த வாலிபர்: சடலமாக மீட்பு.

அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர்: சடலமாக மீட்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லைபுடியாம்பட்டி கிராமத்தில் கல்யாணராமனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 70 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(29) என்பவர் தவறி விழுந்துள்ளார். 

தீயணைப்புத் துறையினருக்கு கல்யாணசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆனந்தை சடலமாக மீட்டனர். 

அப்பகுதியே விஏஓ ஜான்சிராணி கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form