எண்ணங்களின் சங்கமம் - NDSO-V4U Trust சார்பில் மொரப்பூர் இல் இன்று (18-06-2021) வெள்ளிக்கிழமை, காலை 11 மணிக்கு மொரப்பூர் விஸ்வபாரதி பள்ளி அருகில், 108 கிராமிய கலைகுழு, தப்பட்டை, பறை இசை, மயில், ஒயில் ஆட்ட, கலைஞர்கள் குடும்பங்களுக்கு ரூபாய் 1000/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் 108 நபர்களுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
திருமதி சிவகாந்தி,
மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்
திரு காமராஜ்,
மனித உரிமை மண்டல ஒருங்கிணைப்பாளர்
திரு.செந்தில் ராஜா,
தருமபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் திரு.சரவணன்,
RDS தொண்டு நிறுவன தலைவர்
திரு.தர்மலிங்கம்,
CRDS தொண்டு நிறுவன தலைவர்
திரு சிவகுமார்,
தீபம் தொண்டு நிறுவன இயக்குனர்
திருமதி கற்பகவல்லி,
விப்ரோ தொண்டு நிறுவன தலைவர்
திரு.வெங்கடேசன்,
சிற்பி தொண்டு நிறுவன தலைவர்.
திரு.கமலக்கண்ணன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை கலைஞர்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்
திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வேல்விழி,
V4U-நவீன்குமார், ஜோதி கண்ணன், அம்பிகா, பாரதி கலைக்குழு கமலக்கண்ணன்,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எண்ணங்களின் சங்கமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.வெ.பிரகாஷ், செய்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பிரகாஷ் அவர்களுக்கு கலைஞர்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டது.
Tags:
மொரப்பூர்