பொம்மிடி அருகே பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை.

செய்தியாளர் : திலீபன்.
பாப்பிரெட்டிப்பட்டி, ஜுன் 18.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் இவரது மகள் பாரதி.  15 ,.இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

தற்பொழுது பதினோராம் வகுப்பு சேர்வதற்காக வீட்டில் இருந்து வந்த பொழுது நேற்று  முன்தினம் இரவு வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து தந்தை மாதேஷ் உள்ளிட்ட உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால் நேற்று தன் மகள் மாயமானது  குறித்து பொம்மிடி போலீஸில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருக்கின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form