மை தருமபுரி மற்றும் நோ புட் வேஸ்ட் அமைப்பு இணைந்து தினந்தோறும் உணவு வழங்கி வருகிறனர், அவ்வாறு இன்று தருமபுரி பேருந்து நிலையம் பகுதியில் மை தருமபுரி தன்னார்வலர் திரு.முகமது ஜாபர் அவர்கள் உணவு கொடுக்க சென்ற போது ஆதரவற்ற வயதான முதியவர் இருந்துள்ளார்.
இது பற்றி உடனே மீட்பு அறக்கட்டளை பாலச்சந்திரன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். பாலச்சந்திரன் அவர்கள் மூலம் முதியவரை குளிப்பாட்டி தூய்மை செய்து புத்தாடை அணிவித்து தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இது போன்று வீட்டில் உள்ள முதியவர்களை சாலையோரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விட்டு செல்லும் அவலம் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது. இந்த உலகத்தில் பாலச்சந்திரன் போல் நல்ல இதயங்கள் வாழ்ந்தாலும், இரக்கமற்ற சில மிருகங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
முதியவரை மீட்டெடுக்க உறுதுணையாக இருந்த தருமபுரி தாசில்தார் திரு.ரமேஷ், ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் திரு.பிரபு., மீட்பு அறக்கட்டளை பாலச்சந்திரன், மை தருமபுரி தன்னார்வலர் திரு.ஜாபர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Tags:
தருமபுரி