தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்கள், அதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக இன்று பொதுமக்கள் 250 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகிகள் முகம்மது ஆரிப் அபூபக்கர் சித்திக் அஷ்ரப்அலி ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தருமபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் இன்று 19/6/2021தர்மபுரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 5 வயது சிறுமி காஞ்சனா அவர்களுக்கு A+ve இரத்தம் தானமாக சகோதரர் இம்ரான்
வழங்கினார்
அதேபோல இன்று கோபி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு சகோதரர் கிஸர் O+ve இரத்தம் தானமாக வழங்கினார்கள்
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் சக்திவேல் அவர்கள் கொரானா பேரிடர் காலத்திலும் இதுபோன்ற மக்கள் சேவையை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.
Tags
தருமபுரி