அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரக்கோரி திருநங்கைகள் கோரிக்கை.

திருநங்கைகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதில் தகுதியான திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. 

அரூர் பகுதியில் உள்ள திருநங்கைகள் தங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் தமிழக அரசால் வழங்கப்படும் திருநங்கைகள் அடையாள அட்டை வேண்டி அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத் குமார் அவர்கள் அலுவலகத்தில் திருநங்கைகள் நேரில் சந்தித்து எங்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வீடு போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனுவை சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஆண்டு 5 நபர்களுக்கு ஆதார் அட்டை ரேசன் கார்டு பெற்றுத் தந்துள்ளேன் மீதம் இருக்கும் திருநங்கைகள் அனைவருக்கும் பெற்றுத் தருவதாக உறுதி கூறினார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form