மழையால் இடிந்த கிடங்கு கட்டுமானம்.

பாலக்கோடு அடுத்த கரகதஹள்ளியில், 20 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு, மழைக்கு இடிந்து விழுந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி கிராமத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 100 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட குளிர்பதன கிடங்கின் கட்டட பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, கரகதஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், குளிர்பதன கிடங்கிற்கு கட்டப்பட்டிருந்த, 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. மழையால் கட்டுமான பணியாளர்கள் வேறு இடத்தில் ஒதுங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form