தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12 (i) (c) (RTE) - ன்படி, 2021-2022 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தொடக்க நிலை வகுப்பில் LKG சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியாக விண்ணப்பிக்க சார்ந்த பள்ளிகள், அருகில் உள்ள வட்டாரக்கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 05.07.2021 முதல் 03.08.2021 வரை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 171 மெட்ரிகுலேசன் பள்ளிகள் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் RTE சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் சார்பாக கூடுதல் விவரங்கள் பெற சார்ந்த பள்ளிகள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலக தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இணைய வழியில் விண்ணப்பிக்க விருப்பும் பெற்றோர்கள் இத்திட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்க விரும்பும் குழந்தைகளின் புகைப்படம் பிறப்புச்சான்றிதழ், குடும்ப வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதாரச்சான்று (ஆதார் அட்டை, குடும்ப அட்டை வாக்காளர் உரிமை அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் ஒன்று) ஆகியவற்றுடன் 05.07.2021 முதல் 03.08.2021 வரையுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் ஏதேனும் ஒரு இடத்திற்கு நேரில் சென்று இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form