கொலையான மகன்; கைதான தந்தை.


கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி பழையபேட்டை மில்லத் நகரை சேர்ந்தவர் நிசார் அகமது (55). பூ வியாபாரி. இவரது மகன் பைரோஸ் அகமது (23). இவர் இறைச்சி கடையில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தந்தை – மகன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.


இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிசார் அகமது, குடித்து விட்டு அடிக்கடி மகன் பைரோஸ் உடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.


அப்போது, மதுபோதையில் இருந்த நிசார் அகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பைரோஸ் அகமதுவை சரமாரியாக குத்தி உள்ளார்.


இதில், வயிற்று பகுதியில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பைரோஸ் அகமது உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிசார் அகமதுவை கைது செய்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form