அரசு பேரூந்துகள் இயக்க கோரி மக்கள் கோரிக்கை.

கொரோனா தளர்வுகளில் தருமபுரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து அனுமதிப்பட்டது, ஆனால் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது இதனால் கிராமங்களிலிருந்து தருமபுரிக்கு பணி  நிமித்தமாக வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளனர், பலர் தங்கள் இருசக்கர வாகனங்களில் வந்து செல்லும் நிலைக்கு சென்றுள்ளனர், இன்றைய பெட்ரோல் விலைவாசியும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால் பலர் தங்களின் ஊதியத்தில் பெரும்பகுதி பெட்ரோல் வாங்கவே பயன்படுத்தும் நிலைக்கு செல்லவேண்டியது உள்ளது.

மேலும் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லோரும் அதனையே சார்ந்து இருப்பதால் அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையக கடைபிடிக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டனர், இதனால் கொரோனா நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் சூழலை இது உருவாக்கி உள்ளது, எனவே கொரோனா ஊரடங்கிற்கு முன்னாள் இயக்கப்பட்ட அணைத்து வழித்தடங்களிலும் அரசு நகர மற்றும் புறநகர் பேருந்துகள் 50% கண்டிப்பாக இயக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு போதிய அரசு பேருந்துகளை மாவட்டத்தில் இயக்கி பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form