சாகச வீரர்களுக்கு விருது.

டென்சிங் நார்கே தேசிய சாகச விருது-2020 பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு, இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் சாகசங்கள் புரிந்தோர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி  கௌரவித்து வருகிறது.


அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிலம், நீர், வான்வழி சாகசங்கள் நிகழ்த்தியவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதரவிவரங்களை https://dbtyas-youth.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://dbtyas-youth.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள். 05.07.2021 என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form