அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு சிறந்த யோகா ஆசிரியர் விருது.

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு சிறந்த யோகா ஆசிரியர் விருது.       

அரூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் மு.பொன்முடி   வழங்கினார் சிறந்த முறையில் யோகா பயிற்சி பெற்று ஆன்லைனில் கலந்துகொண்டு வெற்றி பெற்று கொரோனா காலத்தில் அருர் கல்வி மாவட்ட காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கியதற்க்காகவும் யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் யோகாவில் பள்ளி அளவில் மாநில போட்டிக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேர்வு பெற்று அரூர் பள்ளி மாணவர் சிறப்பிடம்  பெற்று சிறந்து விளங்குவதால் யோகா மாஸ்டர் விருது தாயுள்ளம் அறக்கட்டளை ஓசூர் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் யோகா நிபுணர்களால் இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த யோகா மாஸ்டர் விருதுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ப.பழனி துரையை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்முடி மற்றும் துணை ஆய்வாளர்  உடற்கல்வி ஆய்வாளர் பள்ளி தலைமையாசிரியர்  மாவட்ட துணை ஆய்வாளர் அரசு மருத்துவர் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடற்கல்வி இயக்குனர் சங்கர் நன்றியுரையாற்றினார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form