பாப்பிரெட்டிப்பட்டி, ஜுன் 17.
செய்தியாளர்: திலீபன்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம்,
பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, கடத்தூர்,தென்கரை கோட்டை பகுதிகளில்
கொரொனா வைரஸ் நோய் தெற்று ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்படுவதையும் இதற்கு மருத்துவம் பார்க்க செல்ல உள்ள சிரமங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு போலி மருத்துவம் பார்ப்பவர்கள் புற்றீசல் போல உருவாகி வருகின்றனர்.
குறிப்பாக பொம்மிடி பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனைகளில் உதவியாளர்களாக பணியில் இருந்து கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொரொனா காலத்தில் நோயாளிகள் வந்து செல்லும் சிரமங்களையும் . வயதான காலத்தில் போதிய பராமரிப்பு இல்லாதவர்கள் குறிவைத்து உதவியாளர்கள் வீடு தேடி வந்து மருத்துவம் பார்கின்றனர் . உதவியாளர்களாக இருந்து பொம்மிடி . பையர் நத்தம்.பி.பள்ளிப்பட்டி . வெங்கட சமுத்திரம். பாப்பிரெட்டிப்பட்டி கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான போலி டாக்டர்கள் இருந்து வருகின்றனர்.
அதே போல மெடிக்கல் ஸ்டோரை சிலர் மருத்துவமனைகளாக மாற்றி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். மருத்துவமனைகள் இல்லாத ஊர்களிலும் மெடிக்கல் ஸ் அமைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
ஆகவே மாவட்ட நிர்வாகமும் இது போன்ற போலி மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:
பாப்பிரெட்டிப்பட்டி