பாப்பிரெட்டிப்பட்டி ஜூன் 17.
செய்தியாளர் : திலீபன்.
பொம்மிடி அருகே வேப்பாடியாறு ஆணைமடு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும்
கண்டு கொள்ளாத தால் இத்திட்டம் விவசாயிகளின் கனவாகிபோனது.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை நிரம்பாவிட்டால், பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திட்டமாக, வேப்பாடியாறு ஆணைமடு நீர்தேக்க திட்டம் ஆகும்.ஏற்காடு சேர்வராயன் மலை பகுதிகளில் மழை பெய்தால் அதிக அளவிலான தண்ணீர் வேப்பாடியாறு வழியாக செல்கிறது.இந்த தண்ணீரை பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த, 1936ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், இந்த ஆணைமடு நீர்தேக்கம் கட்ட நில அளவை செய்து, நிதி பற்றாக்குறையால் இத்திட்டம் கை விடப்பட்டது கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் ஒவ்வொரு ஆட்சியிலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுக்கும் போதும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆனைமடு திட்டம் நிறைவேற்றப்படும் என வாயால் வாக்குறுதி கொடுக்கும் அரசியல் வாதிகள் வெற்றி பெற்ற பிறகு கண்டு கொள்வதேயில்லை. பின்பு கடமைக்கு அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்வதோடு நிறுத்தி விடுகின்றனர். ஆணைமடு நீர்தேக்கம் நிறைவேற்ற பட்டால் அங்கிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள தொப்பையாறு அணைக்கு நீர் செல்வது பாதிக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கை விரித்து விடுகின்றனர்.
இதனால் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தாலுகா விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டம் நிறைவேறினால், இப்பகுதியில் உள்ள பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி,பில்பருத்தி, தாளநத்தம், வேப்பிலைப்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, ரேகடஹள்ளி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதி பெறும். எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றி தங்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள விவசாயிகளுக்கு இது கனவாகவே உள்ளது.இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:
பாப்பிரெட்டிப்பட்டி